மேட்டுப்பாளையத்தில் கனமழை - வீடுகள் இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழப்பு
கோவை மேட்டுப்பாளையம் அருகே மழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.;
கோவை மேட்டுப்பாளையம் அருகே மழை காரணமாக வீடுகள்
இடிந்து விழுந்ததில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் என்ற கிராமத்தில், மழையினால் 3 வீடுகள் இடிந்து விழுந்தது. இதில் பெண்கள், சிறுமி உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.