"மழை நிவாரண பணிகளை தொடங்கிடுங்கள்" - தமிழக அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருவதால், போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2019-12-01 06:40 GMT
தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் , போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தண்ணீர் தேக்கம் காரணமாக கொசு உற்பத்தி பெருகி, அதன் மூலம் டெங்கு பரவுவது அதிகரிக்கக் கூடும் என்று எச்சரித்துள்ள அவர், நிவாரணப் பணிகளை அரசு உடனடியாகத் தொடங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். அவர்  பதிவிட்டுள்ள மற்றொரு பதிவில், "பெரும்பான்மை சிங்கள மக்களின் விருப்பத்திற்கு எதிராக, ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க இயலவில்லை" என்று இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே கூறியிருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார்.  பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு, இலங்கையில் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்