திருச்சியில் 2 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

திருச்சியில் 2 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.;

Update: 2019-11-30 09:51 GMT
திருச்சியில் 2 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ் வழக்கு தொடர்பாக அசாருதீன் என்பவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு  கைது செய்யப்பட்ட நிலையில், அவர் அளித்த தகவலின் அடிப்படையில், இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி, திருச்சி எடமலைப்பட்டிபுதூர் சீனிவாச நகரை சேர்ந்த சர்புதீன், ஜாபர் ஆகியோரது  வீடுகளில் சோதனை நடத்திய அதிகாரிகள், லேப்டாப், செல்போன்கள், பென் டிரைவ் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். தொடர்ந்து இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்