பொங்கல் பரிசு திட்டத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர்

ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2019-11-29 05:39 GMT
ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில், பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து, தமிழகத்தில் அரிசி அட்டை வைத்திருக்கும் இரண்டரை கோடி குடும்ப அட்டைதாரர்கள், அந்தந்த ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம். பரிசு தொகுப்பில், ஆயிரம் ரூபாய் பணத்துடன் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்