காட்டாய ஹெல்மெட் : தொடரும் உயிரிழப்பு எண்ணிக்கை

சென்னையில் ஹெல்மெட் அணிந்திருந்தும் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 6 மடங்கு அதிகரித்துள்ளது.

Update: 2019-11-29 05:14 GMT
சென்னையில் ஹெல்மெட் அணிந்திருந்தும் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 6 மடங்கு அதிகரித்துள்ளது. சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையின் புள்ளி விவரப்படி கடந்த ஆண்டு ஹெல்மெட் அணிந்து இருந்தும் விபத்தில் சிக்கி 202 பேர் காயமும் , 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு ஹெல்மெட் அணிந்திருந்தும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 109. கடந்த ஆண்டு ஹெல்மெட் அணியாமல் விபத்தில் சிக்கி மூன்றாயிரத்தி162 பேர் காயமும் , 591 பேர் உயிரிழந்துள்ளனர். நடப்பு ஆண்டு எண்ணிக்கை 45 சதவீதம் குறைந்து 346 பேர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்து ஆயிரத்தி 636 பேராக உள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை உயர்நீதிமன்றம் அனைவரும் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில் அதனை அமல்படுத்த போக்குவரத்து போலீசார் கடுமையான சோதனைகள் நடத்தியும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் உயிரிழப்புகள் குறையாதது நமக்கு அதிர்ச்சியூட்டும் தகவலாக இருக்கிறது.
Tags:    

மேலும் செய்திகள்