நீதித்துறையை அவதூறாக பேசிய அதிமுக பிரமுகர் கைது
நீதித்துறையை அவதூறாக பேசிய அதிமுக பிரமுகரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.;
நீதித்துறையை அவதூறாக பேசிய அதிமுக பிரமுகரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சமூகவலைதளத்தில் பாஸ்கர் என்பவர் தம்மை எம்.ஜி.ஆர்- ஜெயலலிதாவின் மகன் என தெரிவித்து கொண்டு வெளியிட்டுள்ள வீடியோவில் நீதித்துறையை அவதூறாக பேசியிருந்தார். இது தொடர்பாக ரவிஜெயபால் என்ற வழக்கறிஞர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் பாஸ்கரை கைது செய்த போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.