டிஸ்க் அசெட்ஸ் நிதிநிறுவனம் மீதான வழக்கு - நியாயமான விசாரணையை உறுதி செய்ய உத்தரவு

டிஸ்க் அசெட்ஸ் என்ற நிதி நிறுவனம் ஆயிரத்து 137 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் நியாயமான விசாரணையை உறுதிபடுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-11-19 03:24 GMT
டிஸ்க் அசெட்ஸ் என்ற நிதி நிறுவனம் ஆயிரத்து 137 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் நியாயமான விசாரணையை உறுதிபடுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 10 லட்சத்து 40 ஆயிரம் முதலீட்டாளர்களிடம் வசூல் செய்யப்பட்ட தொகையை மோசடி செய்ததாக தொடர்ந்த வழக்கில் பணத்தை திருப்பி கொடுக்கும் வகையில் ஓய்வுபெற்ற நீதிபதி பால்வசந்தகுமார் தலைமையில் குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அமர்வு, வழக்கின் விசாரணையை உறுதிசெய்யவும், முழு அறிக்கை தாக்கல் செய்யுமாறும் பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்