பிரபல ஜல்லிக்கட்டு காளை உயிரிழ‌ந்த‌து : ஊர்மக்கள் கண்ணீர் அஞ்சலி

மேலூர் அருகே பல்வேறு ஜல்லிகட்டு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிவாகை சூடிய கோவில் காளை உயிரிழந்த‌து.

Update: 2019-11-15 19:48 GMT
மேலூர் அருகே பல்வேறு ஜல்லிகட்டு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிவாகை சூடிய கோவில் காளை உயிரிழந்த‌து. மதுரை மாவட்டம் மேலூர் அருகே செட்டியார்பட்டியில் பெரியகருப்புசாமி கோவிலுக்கு சொந்தமான ஜல்லிகட்டு காளை அலங்காநல்லூர், பாலமேடு, சீராவயல் என பல ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகை சூடியுள்ளது. இந்த காளை திடீரென உடல் நலக்குறைவால் உயிரிழந்த‌தால், அப்பகுதி மக்கள் கண்ணீர்  சிந்தனர். காளைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் வான வேடிக்கையும் ஏற்பாடு செய்யப்பட்டது.  
Tags:    

மேலும் செய்திகள்