உண்ணாவிரதத்தை கைவிடுமாறு ராஜீவ் கொலை குற்றவாளி முருகனுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

வேலூர் சிறையில் உள்ள முருகனை சந்திக்க அவரது மனைவி நளினி மற்றும் உறவினர்களை அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-11-14 12:42 GMT
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சமீபத்தில் தனிமை சிறைக்கு மாற்றப்பட்டார். இதனை கண்டித்து முருகனின் உறவினர் தேன்மொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த  நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் டீக்கா ராமன் அடங்கிய அமர்வு , முருகனுக்கு வழங்கப்பட்டுள்ள 3 மாத கால தண்டனையை திரும்ப பெற்று கொள்ள சிறை துறைக்கு உத்தரவிட்டது. மேலும்  முருகன் அவரது மனைவி மற்றும் உறவினர்களை பார்க்க அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், முருகன் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்