சென்னை : உலக நீரிழிவு தினத்தையொட்டி விழிப்புணர்வு நடை பயணம்
உலக நீரிழிவு தினத்தையொட்டி, சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் விழிப்புணர்வு நடை பயணம் நடைபெற்றது.;
உலக நீரிழிவு தினத்தையொட்டி, சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் விழிப்புணர்வு நடை பயணம் நடைபெற்றது. ஆயுஷ்பதி, ஆயுசா, சென்னை சில்க்ஸ் நிறுவனங்கள் இணைந்து நடத்திய இந்த நடை பயணத்தில் மாணவர்கள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த நடை பயணம் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் அலெக்சாண்டர், உலக நீரிழிவு சுமையில், இந்தியாவின் பங்களிப்பு 49 சதவீதமாக உள்ளதாகவும், இதற்கு ஒருங்கிணைந்த மருத்துவம் மூலம், புதிய சிகிச்சை முறை கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.