நீட் ஆள்மாறாட்டத்தை தடுக்க மாணவர் சேர்க்கையின் போது கைரேகை பதிவு?

நீட் ஆள்மாறாட்டத்தை தடுக்க, மருத்துவ மாணவர் சேர்க்கையின்போது கைரேகை பதிவு செய்வது குறித்து மருத்துவ கல்வி இயக்குனரகம் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2019-11-07 11:35 GMT
நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்த‌து. அப்போது , தேசிய தேர்வு முகமையிடம் இருந்து பெறப்பட்ட 7 ஆயிரம் மருத்துவ மாணவர்களின் கேரேகையை ஒப்பிட்டு பார்க்க 90 நாட்கள் அவகாசம் கோரிய சிபிசிஐடி போலீசார், நிகர்நிலை பல்கலை கழக மாணவர்கள் 16 பேர் கைரேகை வழங்கவில்லை எனக் குற்றம்சாட்டினர். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் , 2 வாரத்திற்குள் கைரேகையை ஒப்பிட்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதேபோல,  கைரேகை வழங்காத மாணவர்களிடம் உடனடியாக கைரேகை பெற்று சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கவும் நிகர்நிலை பல்கலை கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டது. நீட் ஆள்மாறாட்டத்தை தடுக்க, அடுத்த ஆண்டு முதல் மாணவர்  சேர்க்கையின் போது மாணவர்களின் கைரேகை பெறுவது குறித்து, மருத்துவ கல்வி இயக்குனரகம் விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபகள், அடுத்த விசாரணையை 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். விசாரணையின்போது நீதிபதிகள், 24 மணி நேரமும் பணியாற்றும் மருத்துவர்களுக்கும், காவல்துறையினருக்கும் கூடுதல் ஊதியம் வழங்கிட வேண்டும் என, அரசுக்கு வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.   
==

Tags:    

மேலும் செய்திகள்