நயினார்கோவிலில் விளை நிலங்களுக்குள் புகுந்த நீர் - ஏராளமான விவசாய நிலங்கள் பாதி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா நயினார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட தவளை குளம் என்னும் கிராமம் உள்ளது.;

Update: 2019-11-01 01:40 GMT
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா நயினார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட தவளை குளம் என்னும்  கிராமம் உள்ளது. இக்கிராம மக்களின் விவசாய பயன் பாட்டிற்காக உள்ள  கண்மாய் பல ஆண்டுகளாக தூர் வாரி  பராமரிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக கண்மாயில் நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கண்மாய் முழு கொள்ளளவை எட்டியதும் சேதமடைந்து இருந்த மறுகால் பாயும் மடையை உடைத்துக் கொண்டு தண்ணீர் சாலையிலும் விளை நிலங்களுக்கும் புகுந்தது. இதனால் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்