101 அடியை எட்டியது பவானிசாகர் அணை

கடந்த 5 நாட்களாக பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்த்தால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.;

Update: 2019-10-21 09:00 GMT
கடந்த 5 நாட்களாக பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்த்தால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக , 105 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் தற்போது 101 அடியை எட்டியுள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து , இதே அளவு நீடித்தால் , இன்று இரவு அல்லது நாளை அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையொட்டி , ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்