Taiwan | ரயில்வே ஸ்டேஷனில் மக்களை சரமாரியாக கத்தியால் குத்திய நபர்.. 3 பேர் பலி - தைவானில் பதற்றம்
தைவானின் தலைநகரான தைபேவில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகரின் பிரதான ரயில் நிலையத்தின் முக்கிய சுரங்கப்பாதையில் புகை குண்டுகளை வீசிய அந்த நபர், அங்கு சென்ற மக்களை சரமாரியாக கத்தியால் குத்தியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த நபரை துரத்திச் சென்ற போது, கட்டிடம் ஒன்றிலிருந்து தவறி விழுந்ததில் தாக்குதலில் ஈடுபட்ட அந்த நபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.