Bangladesh | வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை.. முக்கிய இடங்களை கொளுத்திய GEN Z - பதற்றம்
வங்கதேசத்தில் தொடரும் வன்முறையால் பதற்றம் நீடிக்கிறது
வங்கதேசத்தில் மாணவர் தலைவர் ஷெரிப் உசிம்மான் ஹாதி உயிரிழந்ததால் அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
வங்க தேசத்தில் கடந்த ஜீலை மாதம் இளைஞர்களின் புரட்சி வெடித்தது. இதற்கு வித்திட்ட மாணவர் தலைவரான ஷெரிப் உசிம்மான் ஹாதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அவரது ஆதரவாளர்கள் திரண்டு வன்முறையில் ஈடுபட்டனர்.
இதில் இந்திய தூதரின் வீட்டை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். பத்திரிக்கை அலுவலகம், கட்சி அலுவலகங்கள் தீக்கு இரையாகின..
அதே போல இந்து மாணவர் ஒருவரை தாக்கி வன்முறையாளர்கள் கொலை செய்தனர். மாணவரின் உடலை மரத்தில் தொங்க விடப்பட்ட பின் சாலையில் தீ வைத்து எரித்து அட்டூழியத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.