Tirunelveli |நெல்லையே வியந்து பார்க்கும் வகையில் இன்று புதிய திட்டத்தை திறந்து வைக்கிறார்முதல்வர்

Update: 2025-12-20 02:18 GMT

திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில், 13 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

தாமிரபரணி கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, துலுக்கர்பட்டி ஆகிய இடங்களில் தொல்லியல் துறையால் அண்மைக் காலத்தில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில், இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

67 கோடியே 25 லட்ச ரூபாய் செலவில், தமிழர் பாரம்பரியத்தை விவரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். தமிழர் வரலாற்றை தெரிந்துகொள்ளும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட வரலாற்று கலைக்கூடம்,5D திரையரங்கம் ஆகியவை அரங்கில் இடம்பெற்றுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்