தீபாவளியை முன்னிட்டு அலைமோதும் மக்கள் கூட்டம் - ஆளில்லா குட்டி விமானம் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு கோவை கிராஸ்கட் ரோடு மற்றும் ராஜவீதி பகுதிகளில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.;
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு கோவை கிராஸ்கட் ரோடு மற்றும் ராஜவீதி பகுதிகளில் உள்ள கடைகளில் மக்கள், கூட்டம் அலைமோதுகிறது. இதனை பயன்படுத்தி வழிப்பறி மற்றும் கைவரிசை காட்டாமல் திருடர்களிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க, போலீசார், கோபுரம் அமைத்து 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.