100 அடியை எட்டியது பவானிசாகர் அணை

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது.;

Update: 2019-10-20 05:36 GMT
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக 2 வது பெரிய அணையாக விளங்கும் இந்த அணை 105 அடி உயரமும் 32 புள்ளி 8 டி.எம்.சி. கொள்ளளவும்  கொண்டது. வடகிழக்குப்பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில், கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நீர் மட்டம் 102 அடியை தொட்டவுடன் உபரிநீர் வெளியேற்றப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்