பட்டாசு டிஸ்பிலே கண்ணாடி புதிதாக அறிமுகம் - கண்களை பாதுகாக்க புதிய முயற்சி

சிவகாசியில் பட்டாசு டிஸ்பிலே கண்ணாடி என்ற புதுவரவு அறிமுகமாகி கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.;

Update: 2019-10-19 23:35 GMT
சிவகாசியில் பட்டாசு டிஸ்பிலே கண்ணாடி  என்ற புதுவரவு அறிமுகமாகி கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கண்ணாடிகளை வாங்கி  கண்களில் அணிந்து பட்டாசுகளை வெடிக்க  சிறுவர்களும், சிறுமியர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த கண்ணாடியை அணிவதன் மூலம் பட்டாசுகளிலிருந்து கண்களை பாதுகாப்பதோடு, பட்டாசும் விதவிதமான வண்ணங்களில் தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்