வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கு : சேலம் மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சேலம் மாவட்டம், மேச்சேரியை சேர்ந்த மீனா வரதட்சணை கொடுமையால் 2014ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.;

Update: 2019-10-18 12:31 GMT
சேலம் மாவட்டம், மேச்சேரியை சேர்ந்த மீனா, வரதட்சணை கொடுமையால் 2014ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கு, சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், மீனாவின் மாமியார் வள்ளிக்கு ஏழாண்டு சிறை தண்டனையும், 65 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு இருந்த கணவர் சம்பந்தமூர்த்தி, மாமனார் பழனிமுருகன் ஆகிய இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்தும் உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்