வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update: 2019-10-02 04:44 GMT
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

உள் மாவட்டங்களான , கிருஷ்ணகிரி , தர்மபுரி திருவண்ணாமலை விழுப்புரம் சேலம் பெரம்பலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது  முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

அடுத்த 2 நாட்களுக்கு பிறகு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் பதிவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்