மழை மீட்பு பணி - ரூ.38.52 கோடி ஒதுக்கீடு

மழை மீட்பு பணி - ரூ.38.52 கோடி ஒதுக்கீடு என தமிழக அரசு அறிவிப்பு;

Update: 2019-09-23 14:31 GMT

இதனை தொடர்ந்து அரசு வெளியிட்ட அறிக்கையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து முப்படை 
அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆய்வு செய்ய உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்ற தயார் நிலையில் மின் மோட்டார்கள் மற்றும் போதுமான அளவு மருந்து மற்றும் பிளீச்சிங் பவுடர் கையிருப்பு இருப்பதாகவும் நியாய விலைக் கடைகளில் 2 மாதங்களுக்குத் தேவையான பொருட்கள் கையிருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மழை மீட்பு பணிக்கு 38 கோடியே 52 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்