"மின்சார வாகனங்களுக்கு 100 % வரி விலக்கு - அரசின் புதிய கொள்கையை முதல்வர் வெளியீடு"

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழக அரசின் புதிய கொள்கையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு உள்ளார்.

Update: 2019-09-16 20:31 GMT
சுற்றுப்புற சூழல்களை பாதுகாத்து, காற்று மாசுபடுவதை குறைக்கின்ற வகையில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை, தமிழகத்தில் உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக " தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை - 2019 " தயாரிக்கப்பட்டு உள்ளது. 

இதனை, சென்னை - தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.  முதல் பிரதியை, அமைச்சர்கள் எம். சி. சம்பத், எம். ஆர். விஜயபாஸ்கர் இருவரும் பெற்றுக்கொண்டனர். 

அனைத்து மின்சார இரு சக்கர வாகனங்கள், கார்கள், 3 சக்கர வாகனங்கள், பேருந்துகள் மற்றும் இலகு ரக சரக்கு வாகனங்களுக்கு 100 சதவீத மோட்டார் வாகன வரி விலக்கு வழங்கப்படும். இந்த வரி விலக்கு 2022 ம் ஆண்டு  இறுதி வரை அமலில் இருக்கும் .

மின்சார வாகனங்கள், அதன் உதிரி பாகங்கள் மற்றும் மின்கலன் , மின்னேற்று உபகரணங்களை உற்பத்தி செய்வோருக்கு, சிறப்பு சலுகைகள் வழங்கப்படும்.

50 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தும், 50 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் கொடுக்கப்படும். என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்