தங்கம் விலை மீண்டும் உயர்வு - சவரனுக்கு ரூ.336 அதிகரிப்பு
சென்னையில், தொடர்ந்து சரிந்து வந்த ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னையில், தொடர்ந்து சரிந்து வந்த ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று காலை சந்தை நிலவரப்படி, 22 கேரட் தங்கம் சவரனுக்கு 336 ரூபாய் உயர்ந்து, 29 ஆயிரத்து 8 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு 3 ஆயிரத்து 626 ரூபாய் வர்த்தகமாகிறது. வெள்ளி கிலோவுக்கு ஆயிரத்து 700 ரூபாய் ஏற்றம் கண்டு, 50 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் சில்லரை விற்பனையில் 1 ரூபாய் 70 பைசா உயர்ந்து 50 ரூபாய் 40 பைசாவுக்கு வணிகமாகிறது.