பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைக்கக்கூடாது : கட்சியினருக்கு அதிமுக தலைமை வேண்டுகோள்

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர், கட் அவுட் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அதிமுகவினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி , துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக அறிவுறுத்தி உள்ளனர்.;

Update: 2019-09-13 10:08 GMT
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர், கட் அவுட் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அதிமுகவினருக்கு முதல்வர்  எடப்பாடி பழனிசாமி , துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக அறிவுறுத்தி உள்ளனர். இளம்பெண் சுபஸ்ரீ இறப்பை தொடர்ந்து, அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், அறியாமையால் சிலர் செய்யும் செயலால், மக்கள் பாதிக்கப்படுவதால் மனவேதனை அடைகிறோம் என்று கூறியுள்ளனர். தலைமையின் அறிவுறுத்தலை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும், கட்சி நிகழ்ச்சி,  திருமண விழா, வரவேற்பு என்கிற பெயரில் மக்களுக்கு இடையூறாக பேனர் வைக்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்