மரங்களின் மீது விளம்பர தட்டிகள் வைத்தால் சிறை

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில், மரங்களின் மீது விளம்பரதட்டிகள், கம்பிகள், ஒயர்கள் போன்றவற்றை அமைப்பவர்கள் மீது 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-08 11:29 GMT
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில், மரங்களின் மீது விளம்பரதட்டிகள், கம்பிகள், ஒயர்கள் போன்றவற்றை அமைப்பவர்கள் மீது 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மரங்களில் அமைக்கப்பட்டுள்ள  விளம்பர பலகைகள், விளக்குகள், ஒயர்கள் போன்றவற்றை 10 நாட்களுக்குள், அந்தந்த நிறுவனங்களே அகற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகார்களை 1913 என்ற இலவச தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்