பொள்ளாச்சியில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து...
பொள்ளாச்சியில் இருந்து 46 பயணிகளுடன் கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.;
பொள்ளாச்சியில் இருந்து 46 பயணிகளுடன் கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 2 பேர் காயமடைந்துள்ளனர். பேருந்து, கோவை - பொள்ளாச்சி இடையே 4 வழிச்சலையில், கிணத்துக்கடவு அருகே சென்ற போது, மற்றொரு வாகனத்தை முந்தி செல்ல முயன்றுள்ளது. இதில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பி மோதியதில், பேருந்து கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த கருப்புசாமி, ரம்யா ஆகிய 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் நிலையில், போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.