காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்சாரம் : கட்டமைப்புகளை பார்வையிட்டார் முதலமைச்சர்

இங்கிலாந்து நாட்டில் உள்ள காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்சார கட்டமைப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.;

Update: 2019-08-31 07:24 GMT
சஃபோல்க் நகரில் உள்ள ஐ.பி.ஸ்விட்ச்- ஸ்மார்ட் கிரிட் நிறுவனத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார். அங்கு காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி கட்டமைப்புகளை அவர் பார்வையிட்டார். மின்சாரத்தை மின்கட்டமைப்பில் எளிய முறையில் சேர்த்திடும் வழிமுறைகள் மற்றும் அதை சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். அந்த திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தும் முறைகள் குறித்து அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்களிடம் விரிவாக விவாதித்தார்.  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதலமைச்சரின் செயலாளர்கள் சாய்குமார், செந்தில்குமார் ஆகியோர் இந்த நிகழ்வின் போது உடனிருந்தனர். லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்தபடி நாளை அமெரிக்கா புறப்படுகிறார். 
Tags:    

மேலும் செய்திகள்