கருக்கலைப்பு வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு பதில்மனு

கருக்கலைப்பு செய்வதற்கான காலத்தை 20 வாரத்தில் இருந்து 24 வாரமாக உயர்த்த சட்டத் துறைக்கு பரிந்துரை செய்துள்ளதாக குடும்ப நல துறை தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2019-08-08 11:05 GMT
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், பாலியல் வன்முறைகளால் கருவை சுமக்கும் பெண்கள், சிறுமிகள் ஆகியோர் கருக்கலைப்பு செய்வதற்கான காலத்தை  24 வாரமாக உயர்த்த வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில்,  இந்த வழக்கு  இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பாக தாக்கல் செய்த மனுவில், கருக்கலைப்பு சட்டத்திருத்தம் தொடர்பாக, குடும்ப நலத்துறை சார்பில் கடந்த மார்ச் மாதம் சட்டத்துறைக்கு பரிந்துரை அனுப்பியதாகவும், புதிய அரசு பொறுப்பேற்ற பின் இதற்கு ஒப்புதல் பெறப்படும் என்று சட்டத்துறை பதிலளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள், வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகளுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்