"பாதகமான அம்சங்களை ஏற்க மாட்டோம்" - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் உறுதி

புதிய கல்விக் கொள்கையில் தமிழகத்திற்கு பாதகமான அம்சங்களை ஏற்க மாட்டோம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் உறுதி அளித்துள்ளார்.

Update: 2019-08-07 10:01 GMT
நடப்பு ஆண்டுக்கான பிஎட் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு சென்னை, லேடி  விலிங்டன் சீமாட்டி கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வை, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் துவக்கி வைத்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பழகன், புதிய கல்வி கொள்கை தொடர்பாக டெல்லியில் நாளை நடைபெறும் கூட்டத்தில் தாம் பங்கேற்கவில்லை என்று தெரிவித்தார். புதிய கல்விக் கொள்கையில் தமிழகத்திற்கு பாதகமான அம்சங்களை ஏற்க முடியாது என்றும், இது தொடர்பாக குழு அமைக்கப்பட்டு அறிக்கை பெறப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். அங்கீகாரத்திற்கான கட்டணம் செலுத்தாத பி.எட்.,  கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சர் அன்பழகன் குறிப்பிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்