பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் : அரசு பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Update: 2019-08-06 09:32 GMT
அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆதார் எண் விவரங்களை சேகரித்து கல்வித் தகவல் மேலாண்மை இணையதளமான இ.எம்.ஐ.எஸ்-இல்  பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்களிலேயே புதிய எண்ணை உருவாக்கி பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 5 மற்றும் 15 வயது முடிவுற்ற மாணவர்களுக்கு புகைப்படம், கைரேகை, கண்கருவிழி ஆகியவற்றை புதிதாக பதிவு செய்ய வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆதார் எண்ணில் மாணவர்கள் ஏதும் திருத்தம் கூறினால், 50 ரூபாய் கட்டணமாக பெற்றுக் கொண்டு, அதனை சரி செய்து கொடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வி அறிவுறுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்