மயிலாடுதுறை : சினிமா பாணியில் நடைபெற்ற கொலை... விபத்தாக மாற்றி திசைதிருப்பிய கொலையாளிகள
மயிலாடுதுறை அருகே சினிமா பாணியில், கொலை செய்துவிட்டு, விபத்தாக மாற்றி போலீசாரை திசைதிருப்பிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.;
நாகை, மயிலாடுதுறை அருகே, ராஜகோபால் என்பவரை அடித்து, காரை ஏற்றி கொலை செய்துவிட்டு, விபத்து போல நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. அமீர் ஹைதர்கான் ராஜகோபாலின் மனைவி ஷீலாவுடன் கடந்த 10 ஆண்டுகளாக தகாத உறவில், வாழ்ந்து வந்துள்ளார். ஷீலாவின் பெயரில் அமீர் பல சொத்துக்களை வாங்கியிருந்த நிலையில், ராஜகோபால் ஷீலாவை, அமீரை விட்டு விலகி வரும் படி தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அமீர் அப்பகுதியை சார்ந்த கருணா என்பவரிடம் பணம் கொடுத்து, ராஜகோபாலை கொலை செய்ய சொல்லியுள்ளார்.
இதையடுத்து, அருண்மொழித்தேவன், சத்தியராஜ், ராஜேஷ், சிவசிதம்பரம் ஆகியோர் ராஜகோபாலை கொலை செய்து விட்டு விபத்து போல மாற்றி தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து வாகன சோதனையின் போது பிடிபட்ட ராஜேஷ், சிவசிதம்பரம் ஆகியோரை விசாரித்த போது இந்த அதிர்ச்சி சம்பவம் அம்பலமாகியது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், தலைமறைவாகிய கருணா, அருண்மொழித்தேவன், சத்தியராஜ், அமீர் ஹைதர்கானை தீவிரமாக தேடி வருகின்றனர்.