குறைந்த விலையில் பெட்ரோல் சேமிக்கும் இயந்திரம் - கோவை அரசு கல்லூரி மாணவர்கள் சாதனை

கோவை அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள், குறைந்த விலையில் பெட்ரோலை சேமிக்க உதவும் இயந்திரத்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

Update: 2019-07-18 03:49 GMT
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சக்கத்தின் சார்பில் நடைபெற்ற ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் என்ற போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.  உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத்தில் நடைபெற்ற போட்டியில், கோவை அரசு பொறியியல் மாணவர்கள் பங்கேற்று, வெற்றி பெற்றனர். குறைந்த செலவில் நீராவி இயந்திரம் அமைத்து அசத்திய மாணவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மாணவர்களின் இந்த இயந்திரம், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் நிரப்பும் போது, ஆவியாதலை தடுத்து மீண்டும் எரிபொருளாக மாற்றுகிறது. தற்போது உள்ள நீராவி இயந்திரங்கள்15 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தங்களின் கண்டுபிடித்துள்ள இயந்திரத்தை  50 ஆயிரம் ரூபாய்க்கே வாங்க முடியும் என மாணவர்கள் கூறுகின்றனர். மாணவர்களின் இந்த கண்டுபிடிப்பை முக்கிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஆதரித்துள்ளதால்,  இதுவே தங்களுக்கு மிகப்பெரிய உந்துதல் என மாணவர்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்