"திருவள்ளுவர் சிலைக்கு ரோப்கார் வசதி செய்ய பரிசீலனை" - சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தகவல்
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.;
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார். கேள்வி நேரத்தில் பேசிய திமுக உறுப்பினர் ஆஸ்டின், திருவள்ளுவர் சிலைக்கு ரோப் கார் அமைக்க வேண்டும் என்றும், செயற்கை கடற்கரை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருவள்ளூவர் சிலைக்கு ரோப்கார் வசதி அமைப்பது குறித்து தமிழ்நாடு கடல்சார் வாரியம் மூலம் அரசு பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்தார்.