ஸ்ரீவைகுண்டம் : குருசு கோவில் திருவிழா கொடியேற்றம்

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.;

Update: 2019-07-17 02:32 GMT
ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் குருசு கோவில் என்று அழைக்கப்படும் புனித சந்தியாகப்பர் கோவில் திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது. இன்று பக்தர்கள் சூழ்ந்திருக்க திருவிழா கொடியேற்ற விழா நடைபெற்றது. மாலை, புனித சந்தியாகப்பரின் சொரூபம் குருசு கோவிலில் இருந்து கிருஸ்துவ கீதங்கள், இசை வாத்தியங்கள், வாண வேடிக்க்களுடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இதை தொடர்ந்து, கொடியேற்றம் நடைபெற்றபோது, பக்தர்கள் சமாதான புறாவை பறக்க விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  
Tags:    

மேலும் செய்திகள்