திருவெறும்பூரை சேர்ந்த தீப ரோஷினி என்பவர், திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவர், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் விசாரணையில், தீபரோஷினி தூத்துக்குடியை சேர்ந்த மதன் என்பவரை காதலித்து வந்ததும், அதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததோடு படிப்பை முடித்த பின் பார்த்து கொள்ளலாம் என கூறியதும் தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட விரத்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தீப ரோஷினி உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.