MGR | MGR Fans | 38 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர் நினைவு நாளில் ரசிகர் உண்ணாவிரதம், மெளன விரதம்
தூத்துக்குடியில் கடந்த 38 வருடங்களாக எம்.ஜி.ஆர் நினைவு நாளில் அவரது தீவிர ரசிகர் ஒருவர் உண்ணாவிரதம் மற்றும் மௌன விரதம் கடைபிடித்து வருகிறார். ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த ராஜப்பா வெங்கடாச்சாரி, வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர். சிறுவயது முதலே எம்ஜிஆர் ரசிகராக இருந்து பின்னர் பக்தராகவே மாறியுள்ளார். எம்ஜிஆர் இறந்த ஆண்டிலிருந்து இன்று வரை அவரது நினைவு தினத்தில் அவர் விரதம் இருந்து வருவதாக அப்பகுதியினர் நெகிழ்ச்சி தெரிவித்தனர்.