ரஜினி அரசியலுக்கு வந்தால் ஸ்டாலின் முதல்வராக முடியாது - அர்ஜுன் சம்பத்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-16 10:49 GMT
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். நாகையில் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத் இவ்வாறு தெரிவித்தார். ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலை முன் நிறுத்தி முதலமைச்சராவது உறுதி என்று கூறிய அவர், ஸ்டாலின் அரசியல் கனவு பலிக்காது என்றும், ஸ்டாலின் முதலமைச்சர் ஆக ரஜினி இடையூறாக இருப்பார் என்றும் கூறினார். தொடர்ந்து, தேசிய கல்வி கொள்கை குறித்து முழுமையாக தெரிந்து கொண்டு நடிகர் சூர்யா பேச வேண்டும் என்று கூறிய அர்ஜுன் சம்பத், மும்மொழி கொள்கை தமிழுக்கும், தாய்மொழிக்கும் எதிரானது என்ற பொய்யான பிரச்சாரத்தை செய்து வருவதாக தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்