சட்ட பல்கலைக்கழக சிறப்பு பட்டமளிப்பு விழா : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு

தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ராம்நாத் கோவிந்த்,நீதிபதிகள் சதாசிவம், பாப்டே, தகில்ரமானி ஆகியோருக்கு, சட்டவியல் முனைவர் பட்டம் வழங்கினார்.

Update: 2019-07-13 11:06 GMT
தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ராம்நாத் கோவிந்த்,நீதிபதிகள் சதாசிவம், பாப்டே, தகில்ரமானி ஆகியோருக்கு, சட்டவியல் முனைவர் பட்டம் வழங்கினார். பின்னர் பேசிய அவர், சட்ட எழுத்தறிவை மேம்படுத்துவதுடன், சட்ட விதிகளை எளிமைப்படுத்துவதற்கான தேவை, தற்போது உள்ளதாக தெரிவித்தார். நீதியை மக்களிடம் கொண்டு செல்வதை விட, அதனை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ளும் மொழியிலும் இருக்க வேண்டும் என்றும் உள்ளூர் மற்றும் பிராந்திய மொழிகளில், தீர்ப்புகளின் நகல்களை வழங்க உயர்நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராம்நாத் கோவிந்த்  கூறினார். தீர்ப்புகளின் நகல்களை கேரள உயர்நீதிமன்றம் மலையாளத்திலும், சென்னை உயர்நீதிமன்றம் தமிழிலும் வழங்கலாம் எனவும் ராம்நாத் கோவிந்த்,  தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்