"தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தென் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2019-07-13 10:57 GMT
தென் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பம் சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கத்தால், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கான சாத்திய கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில், வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையை எதிர்ப்பார்க்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்