பவானிசாகர் அணையில் நீர்மட்டம் உயர்வு

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2019-07-07 08:51 GMT
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105  அடி உயரம், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்புபகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 1872 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 56.75 அடியாகவும், நீர் இருப்பு 6.2 டிஎம்சி யாகவும் உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்