7,8,9,10,11 பாட புத்தகங்களில் சர்ச்சை கருத்துக்கள் : நீக்கி விட்டு புதிய கருத்துக்களை சேர்க்க உத்தரவு

7, 8, 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு புத்தகங்களில், இடம்பெற்ற தவறான கருத்துக்களை நீக்கி விட்டு புதிய கருத்துக்களை சேர்க்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Update: 2019-06-27 21:33 GMT
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி என்ற வாக்கியம் நீக்கப்பட்டு, இந்தி அலுவல் மொழி மட்டுமே என்றும், இந்தி மொழி பேசாத மாநிலங்களில், ஆங்கிலம் இணைப்பு மொழியாக பயன்படுத்த அரசியல் அமைப்பில் வழி வகை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதே வகுப்பு பாட புத்தகத்தில், முத்துராமலிங்கத் தேவர், ஆட்டுக்குட்டியை வாங்கி காமராசர் பெயரில் வரி கட்டி, அவரை தேர்தலில் போட்டியிட வைத்தார்' என்ற பகுதி நீக்கப்பட்டுள்ளது. இதே போல், 10 ம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில், அய்யா வழி வைகுண்ட சுவாமிகள் படம் நீக்கப்பட்டுள்ளது. இதுபோல், 19 தவறுகளும், சர்ச்சைகளும் நீக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளுக்கு மாற்றாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ள பகுதிகளை சேர்த்து, மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என இயக்குநர் தெரிவித்துள்ளார். இதனால், புதிய பாட புத்தகங்களில், ‛ஒட்டு' போட்டு, மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்