குடிநீர் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது - அமைச்சர் கடம்பூர் ராஜு

குடிநீர் பிரச்சினைக்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.;

Update: 2019-06-20 23:57 GMT
குடிநீர் பிரச்சினைக்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் பள்ளியில், மாணவி இமையவள் என்பவர் ஒரு மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் எம்.எல்.ஏ சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, குடிநீர் பிரச்சனைக்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் தென்மேற்கு பருவ மழை அதிகரிக்க கூடிய நேரத்தில் அணைகள் நிரம்பும் என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்