புவி வெப்பமயமாதலை தடுக்க பள்ளி மாணவி விழிப்புணர்வு பிரசாரம்

புவி வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4 லட்சம் விதைகளை தூவிய படி, சென்று திரும்பும் விழிப்புணர்வு பிரசாரத்தை பள்ளி மாணவி ரக்‌ஷனா கரூரில் தொடங்கினார்.

Update: 2019-06-15 06:54 GMT
புவி வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4 லட்சம் விதைகளை தூவிய படி, சென்று திரும்பும் விழிப்புணர்வு பிரசாரத்தை பள்ளி மாணவி ரக்‌ஷனா கரூரில்  தொடங்கினார். ராமேசுவரப்பட்டியைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவி ரக்சனா, மரக்கன்றுகளை வளர்ப்பதில் ஆர்வமுடையர். இதுவரை 80 ஆயிரம் மரக்கன்றுகளை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி உள்ளார்.  இந்நிலையில் புவி வெப்பமயமாதலை தடுக்க மற்றும் உலக அமைதியை வலியுறுத்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சென்று, மீண்டும் கன்னியாகுமரி வரை திரும்பும் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கினார். 
Tags:    

மேலும் செய்திகள்