மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறக்க வாய்ப்பில்லை - அமைச்சர் காமராஜ்

ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

Update: 2019-06-07 11:52 GMT
ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பழமையான கட்ட‌டம் ஒன்றில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, அதனை பார்வையிட்ட அமைச்சர் காமராஜ், புதிய கட்ட‌டம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பருவமழை இந்த ஆண்டும் தள்ளி போய் உள்ளதால், கர்நாடக அரசிடம் இருந்து தண்ணீரை எதிர்நோக்கி காத்திருப்பதாக கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்