மதுரை களைகட்டிய மாட்டுவண்டி பந்தயம் : மழை பெய்ய வேண்டி ஏற்பாடு
மழை பெய்ய வேண்டி, மதுரை மேலூரில், மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது.;
மழை பெய்ய வேண்டி, மதுரை மேலூரில், மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது. மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 48 ஜோடி மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. பந்தய இலக்கை எட்டுவதற்காக, சீறிப்பாய்ந்த மாட்டுவண்டிகளை, சாலையின் இருபுறமும் கூடியிருந்த பலரும் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.