சூறைக் காற்றுடன் கனமழை : மின்சாரம் தாக்கி டாஸ்மாக் ஊழியர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரத்தில் மம்சாபுரம், வன்னியம்பட்டி, மல்லி கிருஷ்ணன்கோவில், நூர்சாகிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.;

Update: 2019-06-03 03:32 GMT
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரத்தில் மம்சாபுரம், வன்னியம்பட்டி, மல்லி கிருஷ்ணன்கோவில், நூர்சாகிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது நூர்சாகிபுரத்தில், டாஸ்மாக் ஊழியர் செல்லக்கனி, தனது வீட்டின் மாடியில் சாய்ந்த வேப்ப மரத்தின் கொப்புகளை வெட்டும்போது மின்சாரம் தாக்கியது. அதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
Tags:    

மேலும் செய்திகள்