நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தேர்வு கட்டாயமில்லை என அறிவிக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகம் செய்வதற்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை என அறிவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Update: 2019-06-01 13:27 GMT
கடந்த 2012ம் ஆண்டு தமிழகத்தில் முதல்முறையாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டதால், அதற்கு முன்பு பணியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமல்ல என அறிவிக்க உத்தரவிடக் கோரி,  பார்த்திபன் என்பவர் உள்ளிட்ட நான்கு ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்தனர். தங்களது பணி நியமன உத்தரவில், தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என மனுவில் அவர்கள் கூறியுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய தடை விதித்த வழக்குடன் சேர்த்து இந்த வழக்கையும் விசாரணைக்கு பட்டியலிடுமாறு உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்