Sabarimala | சபரிமலை வனப்பகுதியில் சிக்கிய தமிழக பக்தர்கள்.. உடனே இறங்கிய அதிகாரிகள்
சபரிமலை வனப்பகுதியில் சிக்கிய தமிழக பக்தர்கள் 24 பேர்
தமிழக ஐயப்ப பக்தர்கள் 24 பேர் மலைப்பாதை வழியாக சபரிமலைக்கு நடைபயணமாக சென்றபோது வழிதவறி கல்லேலி வனப்பகுதியில் சிக்கிய நிலையில் வனத்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 24 ஐயப்ப பக்தர்கள் அடங்கிய குழுவினர் அச்சன்கோயில் வழியாக சபரிமலைக்கு காட்டு பாதையில் நடந்து செல்ல முயன்றுள்ளனர். அப்போது கல்லேலி வனப்பகுதியை கடந்து செல்லும்போது வழி தவறியதால் மேற்கொண்டு செல்ல இயலாமல் பரிதவித்துள்ளனர். இதையடுத்து உடனடியாக , வனத்துறையினரை தொடர்பு கொண்ட ஐயப்ப பக்தர்கள் தாங்கள் வனப்பகுதியில் சிக்கியது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் கல்லேலி வனப்பகுதியில் சிக்கியுள்ள தமிழக பக்தர்களை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் ஐயப்ப பக்தர்களை மீட்டு வாகனம் மூலம் சபரிமலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது...