கடலூர் மருத்துவமனை வளாகத்தில் வீசப்படும் மருத்துவக் கழிவுகள் : நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கடலூரில் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கழிவுகளை வீசுவதால் நோய் தொற்று ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2019-05-28 11:52 GMT
அரசு மருத்துவமனைகளில் மருத்துவக் கழிவுகள் மருத்துவமனை வளாகத்தில் ஒதுக்குப்புறமாக உள்ள குடோனில் சேமிக்கப்படும். ஆனால் காட்டுமன்னார்கோவில் மருத்துவமனையில், பணியாளர்களின் கவனக்குறைவாலும் அலட்சியத்தாலும் பயன்படுத்தப்பட்ட ஊசி போன்ற கழிவுகள் பெரும்பாலும் வளாகத்தில் பல பகுதிகளில் போட்டு விடுவதாக கூறப்படுகிறது. மருத்துவ வளாகத்தை சுத்தம் செய்யும் போது தான் இந்த கழிவுகள் அகற்றப்படுகின்றன. சுத்தம் செய்யும் பணிகளுக்கு முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் புகார் உள்ளது. இதனால் உள்நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்களுக்கு நோய்தொற்று ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தலையிட்டு மருத்துவமனையின் இதுபோன்ற அலட்சியபோக்கை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்